Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டை மீளமைப்பதற்கு விரைவாக நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக, இலங்கை செஞ்சிலுவைச் சங்க தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கேட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, கிளிநொச்சியில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளையின் யாகத்தர் அலுவலகத்தில் பயனாளி ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(20) அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவரினால் உத்தரவிடப்பட்டு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினர்களால் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை தெளிவான முடிகளைத்தந்திருக்கவில்லை.
இதனையடுத்து, இலங்கை செஞ்சிலுவை சங்கத் தலைவரால் இரண்டாவது விசாரணை உத்தரவிடப்பட்டதுடன், ஐந்து பேர் கொண்ட குழுவொன்றையும் நியமித்திருந்தார். இதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சமாசத்தினதும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினதும் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில், யாழ்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதகரத்தின் பிரதானி ஒருவரும் அவதானிப்பாளராக இருந்தார்.
இந்தக் குழு, கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி தனது விசாரணையை கிளிநொச்சியில் ஆரம்பித்ததுடன், புகார் அளித்தவரையும், ஒன்பது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் உட்பட வேறு 15 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தி, ஒக்டோபர் 16ஆம் திகதி தமது அறிக்கையை, இலங்கை செஞ்சிலுவை சங்கத் தலைவருக்கு அனுப்பியிருந்தனர்.
இதன்படி, இலங்கை செஞ்சிலுவைச் சங்க தொழில்நுட்ப உத்தியோகத்தர் தவறான வகையில் நடந்து கொண்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago