Freelancer / 2025 ஜனவரி 29 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் இன்று முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கருவாத்தோட்டம் - விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
அத்துடன் ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடான மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் என தெரிவித்துள்ளது. R
11 minute ago
29 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
56 minute ago
1 hours ago