2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

இரும்பு பெட்டிக்குள் இளம்பெண்: 2 மனைவிகள் இருந்தும் புத்தி தடுமாறிய ஆபீசர்

Editorial   / 2026 ஜனவரி 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிவிங் டூ கெதரில் ஆசை ஆசையாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், நாளடைவில் கொலை வரை சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்த தவறுகளை செய்து, இன்று சட்டத்தின் பிடியில் குற்றவாளியாகி உள்ளார். இதுகுறித்து பொலிஸார் சொல்வது என்ன? என்ன நடந்தது?

உத்தரப் பிரதேசம், ஜான்சி பகுதியில் வசித்து வருபவர் ராம் சிங் பரீஹார். 62 வயதாககிறது. 62 வயதான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். பிள்ளைகள், பேர பிள்ளைகள் உள்ளனர்.
ஆனாலும் யாருக்கும் தெரியாமல் ப்ரீதி என்ற பெண்ணுடன் லைவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். 32 வயதான ப்ரீதிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. எனினும் இருவரும தங்களது குடுமபத்தை மறந்து, ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் இருந்த இந்த உறவு, காலப்போக்கில் பணம் தொடர்பான பிரச்சனைகளால் கடுமையான மோதலாக மாறியுள்ளது. ப்ரீதி அடிக்கடி ராம் சிங்கிடம் அதிக அளவில் பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். நாளுக்கு நாள் ப்ரீதியின் டார்ச்சரை சமாளிக்க முடியாத நிலை ராம் சிங்குக்கு ஏற்படவும், இதுவே இருவருக்கிடையேயான தகராறுக்கு காரணமாகியுள்ளது.

 ஜனவரி 8ஆம் திகதி, இந்த தகராறு உச்சக்கட்டத்தை எட்டியது.. ஆவேசமடைந்த ராம் சிங், ப்ரீதியை கொடூரமாக கொன்றுள்ளார். பிறகு சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல், தர்ப்பாலின் துணியில் சுற்றி சில நாட்கள் மறைத்து வைத்துள்ளார்.
அதற்கு மேல் அப்படியும் வைக்க முடியாமல், ஒரு பெரிய இரும்புப் பெட்டியை விலைக்கு வாங்கினார்.. அதன் உள்ளே ப்ரீதியின் உடலை வைத்து, அடியில் மரக்கட்டைகள், கம்பளம் போன்றவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் எரிந்து, சாம்பலும் எலும்பு துண்டுகளுமே மிச்சம் இருந்துள்ளன. இவைகளையும் மறைக்க அவர் முயன்றுள்ளார்.ஷ

எரிக்கப்பட்ட உடலின் சாம்பலை ஒரு ஆற்றில் வீசியுள்ளார். அதன்பின், அந்த இரும்புப் பெட்டியை வேறு இடத்திற்கு கொண்டு சென்று மறைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடைய மகனின் உதவியையும் ராம்சிங் பெற்றிருப்பதாக தெரிகிறது.

அந்த பெட்டியை எடுத்துச் சென்ற லோடர் வண்டி டிரைவருக்கு ராம்சிங் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பெட்டியில் இருந்து வித்தியாசமான நாற்றம், அதிக எடை காரணமாக சந்தேகித்த அவர், உடனே பொலிஸூக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெட்டியை திறந்தபோது, அதில் எரிந்த எலும்புகள் மற்றும் சாம்பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தடவியல் நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராம் சிங்கின் மகன் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். ஆனால் ராம் சிங் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை பொலிஸார் இறங்கி உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X