2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரவு விடுதி உரிமையாளர் கொலை; 6 பேருக்கு விளக்கமறியல்

George   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் காரத்தே சாம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை எட்டுப்பேரை சந்தேகத்தின் பேரில்  பொலிஸார் கைதுசெய்திருந்தனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், அநுராதபுரம் பிரதான நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமாகிய உமேஸ் ஷானக்க முன்னிலையில் இன்று செய்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்போது, சந்தேகநபர்கள் 6 பேரை  எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X