Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.கமல்
அமைச்சரவையில் இடம்பெற்ற கருத்தாடல்களை உண்மைக்குப் புறம்பாக ஊடகங்களுக்கு அறிவித்த அமைச்சர்கள் இருவர், யாரென இனங்கண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, அவ்விருவரையும் அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கவேண்டுமெனவும் கோரியுள்ளார்.
காலி - பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவின் உளவுத்துறையான “றோ” அமைப்பு தன்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது எனத் தெரிவித்ததாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சிலர், ஊடகங்கள் வாயிலாகப் பிரசித்தப்படுத்தியிருந்தனர். எனினும், அவ்வாறு வெளியாகியிருந்த அந்த விடயம் தொடர்பிலான செய்தியை ஜனாதிபதியும் மறுத்திருந்தார்.
“எனவே, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்துகொண்டு, எதிர்த்தரப்பினருக்கு இலாபத்தை பெற்றுத்தர முயற்சிக்கும் அமைச்சர்கள் யாரெனக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடலில் இருவரின் பெயர்கள் இனங்காணப்பட்டுள்ளன.
“இவ்வாறான அமைச்சர்களைக் கண்டுபிடித்து அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவதற்கான பொறுப்பும் ஜனாதிபதிக்கு உள்ளது” எனத் தெரிவித்த அவர், “அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்வரவேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.
“அமைச்சரவையில் இடம்பெற்ற விடயங்களை சர்வதேசத்துக்குப் போலியாக எடுத்துரைப்பது பெரும் தவறாகும். எவ்வாறாயினும், இந்த போலிக் கருத்துகளால் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முடியாது. எனவே, 2020 ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெறுவார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
24 minute ago
55 minute ago