2026 மே 08, வெள்ளிக்கிழமை

இருவர் சடலங்களாக மீட்பு: சின்ன உப்போடையில் பரபரப்பு

Editorial   / 2026 மே 07 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


 கனகராஜா சரவணன் 

மட்டக்களப்பு: மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை (07) மாலை 5:00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். இது குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகளினால் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது, நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .