S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}



சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, அரசு சீன அரசாங்கத்திடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியையும், 10 மில்லியன் யுவான் (Yuan) மதிப்புள்ள அவசர நிவாரணப் பொருட்களையும் நன்கொடையும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கைக்கான சீன தூதர் கி ஜென்ஹாங் (HE Qi Zhenhong) இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெராத்திடம் வழங்கியுள்ளார்.
அத்துடன், சீன செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதுடன்,
சீனாவில் உள்ள பல நிறுவனங்களும் 10 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளார்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற வானிலை நிலைமைகளைத் தொடர்ந்து, இலங்கையின் நீண்டகால நண்பரான சீனா அளித்த ஆதரவிற்காக இலஙகை அரசாங்கத்தின் மனமார்ந்த நன்றியை அமைச்சர் ஹெராத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிட்வா புயல் இலங்கையில் ஏற்படுத்திய கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பல உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் பாதிக்கப்பட்டோருடன் சீன மக்கள் தங்களது துயரத்தை பகிர்கின்றனர்.
15 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
33 minute ago