2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

S.Renuka   / 2025 ஜூலை 27 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த  ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளதாக  இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி,  1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

இவர்களில் 269,780 பேர் இந்தியாவிலிருந்தும், 124,652 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 114,644 பேர் ரஷ்யாவிலிருந்தும் வந்ததாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X