Freelancer / 2022 நவம்பர் 24 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதனூடாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. R
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026