2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மியன்மார் முடிவு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக மியன்மார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மியன்மாரிலுள்ள இலங்கை தூதுவராலயம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி அமைச்சின் மீன்பிடி நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்று (17) மியன்மாரின் பொதுமன்னிப்பு தினம் என்பதால், அதற்கு அமைவாக கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 12 பேரையும் லிடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,  இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை கிடைக்கும் என கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .