2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்க பிலிப்பைன்ஸ் தயார்

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நன்மைக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயார் என, பிலிப்பைன்ஸ் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸுக்கான அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் சபாநாயகரும் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி குலோரியா மெகபங்கல் அரோயோ (Gloria Macapangal Arroyo) ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு, மனிலா நகரில் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றபோதே, பிலிப்பைன்ஸ் சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடல்களின்போது, இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்தப் பணிக ளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை விரிவாக முன்னெடுத்து செல்வதற்காக பிலிப்பைன்ஸ் தூதரகமொன்றை, கொழும்பில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாட்டு இலங்கை ஜனாதிபதியும் பிலிப்பைன்ஸ் சபாநாயகரும் ஒருமைப்பாட்டுக்கு வந்ததுடன், அதற்கேற்ற காணியொன்றை கொழும்பில் பெற்றுக்கொள்வதற்கான தலையீட்டை தான் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்தாமல் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாதென்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கெதிராக இலங்கை மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு பிலிப்பைன்ஸ் அரசின் பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான விவசாயத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு அரச தலைவர்களின் சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த பிலிப்பைன்ஸ் சபாநாயகர், அந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .