Editorial / 2019 மே 17 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா கைக்கொடுக்கும் என்று, அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மைக்கல் போம்பே தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மைக்கல் போம்பேமை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்குக் கடும் கண்டம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு செயலாளர், தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு, இலங்கை அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை, அமெரிக்கா வழங்கும் என்றும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில், அமெரிக்க பிரஜைகள் ஐவர் உட்பட 250 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
51 minute ago
1 hours ago