Janu / 2026 மார்ச் 26 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான எரிசக்தித் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வியாழக்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் விரிவுபடுத்தல், எரிபொருள் விநியோகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்திற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை (26) முற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்யப் பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) ஆகியோர் வரவேற்றனர்.
அவர்களுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல மற்றும் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன ஆகியோரும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
உலகளாவிய சந்தை நிலைமைகள் மாறிவரும் பின்னணியில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை, குறிப்பாக எரிசக்தித் துறையில் மேம்படுத்த இரு நாடுகளும் எடுத்துவரும் முயற்சியை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது.
21 minute ago
34 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
49 minute ago
2 hours ago