2025 மே 02, வெள்ளிக்கிழமை

இவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பொருந்தாது

Freelancer   / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர்கள், சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இயங்க அனுமதிக்கப்படுவர் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (24) தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், பொருளாதாரத்தை உயர்த்தவும், நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் அரசாங்கம் விரும்புவதாகவும், அதன்படி அந்தந்த துறைகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவுடன் அமைச்சில் இன்று (24) காலை  நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .