Freelancer / 2026 ஜனவரி 16 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், அவர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தியாவது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்துள்ளார்.
ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியக் குடிமக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. (a)
13 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago