2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உடன் அமுலுக்கு வரும் வகையில் 09 பொலிஸார் இடமாற்றம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் ஐந்து பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்கலாக 09 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

01. பிரதான பொலிஸ் பரிசோதகர் எப்.எம்.டி. ஹெரான், புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்திலிருந்து தெமட்டகொடை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

02. பிரதான பொலிஸ் பரிசோதகர் எல். களு ஆராச்சி, ஜா-எல பொலிஸ் நிலையத்திலிருந்து புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

03. பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.டபிள்யூ. லோரன்ஸ், காங்கேசன்துறைப் பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜா-எல நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

04. பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.எஸ்.அமரதுங்க, சிலாபம் பொலிஸ் பிரிவிலிருந்து காங்கேசன் துறை பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

05. பொலிஸ் பரிசோதகர் ஏ.பீ.சேனாநாயக, நவகமுவ பொலிஸ் பிரிவிலிருந்து கொழும்பு திசாவ பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

06. பொலிஸ் பரிசோதகர் கே.எம். த சில்வா, இளவாலைப் பொலிஸ் நிலையத்திலிருந்து நவகமுவ பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

07. பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.ஆர். சேனாநாயக்க, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிலிருந்து இனிகொடவெலவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

8. பொலிஸ் பரிசோதகர் எல்.எப்.பீ. த சில்வா, கிரி-எல்லயிலிருந்து கொழும்பு திசாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

9. பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.பே.எஸ். பண்டார நீர்கொழும்பிலிருந்து கிரி- எல்லவுக்கும் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .