Freelancer / 2024 செப்டெம்பர் 11 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சைக்கிளில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் அந்த மாணவி மீது மோதி, டிப்பரின் பின் சில் ஒன்று மாணவியின் மீது ஏறியது.
இதன்போது படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அங்கு அவர் உயிரிழந்துள்ளார். (a)
17 minute ago
24 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
3 hours ago
5 hours ago