2026 ஜனவரி 21, புதன்கிழமை

உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

Freelancer   / 2026 ஜனவரி 21 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். 

இதன்போது, சர்வதேச பங்காளிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜோசப் சிகேலாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பிரதமர், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, இருதரப்புப் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்துக் கவனம் செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து, பிரதமர் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டு மையத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் மசாடோ கான்டாவை சந்தித்தார். 

இதன்போது இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான உறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 

அத்தோடு, மென்சீஸ் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரினுடனான சந்திப்பின்போது, பிரதமர் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினார். 

உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டங்களுக்கு இணையாக டாவோஸ், பிஸ் புய்னில் அமைந்துள்ள Euronews Hub இல் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா மன்றத்தின் உயர்மட்டக் கலந்துரையாடலிலும் பிரதமர் பங்குபற்றினார். 

பிரதமருடன், தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்தவும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றார். (M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X