Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
வடக்கில் ஒரு முகத்துடனும் தெற்கில் மற்றுமொரு முகத்துடனும் இரட்டை முகங்களைக்கொண்ட அரசியல் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, “இங்கே உழாத மாடு ஜெனீவாவில் உழாது” என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) அமைச்சுகள் மீதான, குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து இன, மத, சமூக, அரசியல் மோதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்” என்றார்.
“உண்மையில், இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து வதிலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டுமென்ற விடயத்தை நாம் தேசிய நீரோட்டத்துக்கு வந்தகாலம் தொடக்கம் கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்” என்றார்.
இதையே இந்தியாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், இம்முறை ஜெனீவா அமர்விலும் இந்தியா இதைனையே வலியுறுத்தியுள்ளது. இந்தியா இந்த விடயத்தில் தனது கடப்பாட்டை நிறைவேற்றியுள்ளமை தொடர்பில் மக்கள் சார்பாக இந்திய அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பொறுப்புக் கூறல் விடயம் இந்த அரசாங்கத்தை சார்ந்ததாகும். இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடத்துக்குக் கொண்டுவந்து, முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரினதும் பொறுப்பாகும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது என்றார்.
வடக்கில் அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம் என்றும், தெற்கில் அரசுக்கு கால அவகாசம் வழங்குமாறும் இரட்டைப் போக்கை த.தே.கூட்டமைப்புக் கடைப்பிடிக்கின்றது.
பொறுப்புக் கூறல் விடயத்தில் ஆலோசனைகளை வழங்கி ஆவணங்களைத் தயாரித்துக்கொண்டும், மறுபக்கத்தில் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துகளையும் முன்வைக்கின்றனர். இதனை எம்மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago