Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூலை 04 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக வனவிலங்கு குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட மேற்படி சந்தேகநபர், பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியதாக பதிவு இருப்பது முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷீஹான் மாலை இரவு 7 மணியளவில் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்தார். அவர் சோதனை செய்த பிறகு, அதிகாரிகள் அவரை எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி மேலும் சோதனைக்கு உட்படுத்தினர். அவரிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் அதிகாரிகள் அவரது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டார். அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
43 minute ago