Editorial / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக்குச் சென்றால், “சேர், உள்வீட்டுக்குள் குழப்பம்” என்பட்டுள்ளதா? எனக் கேட்கின்றனர். அரசாங்கத்துக்குள் உள்வீட்டு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளனவா என இன்னும் சிலர் கேட்கின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில, ஆம், அரசாங்கத்துக்குள் கடுமையான புரட்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது உண்மை என்றார்.
“அவ்வாறான புரட்சிகள், அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அல்ல: அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகும்” என்றார்.
அவிசாவளையில் நேற்று (04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
மக்களின் ஆணையை பாதுகாக்க, மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை பாதுகாக்க, 69 இலட்சம் பேரின் அபிலாசைகளை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான புரட்சிகள், அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், எங்களுக்குத் தெரியும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக திருத்தப்பட்ட பல விடயங்கள், மக்களின் ஆணைக்கு முரணானது என்றார்.
“மக்களின் ஆணையை பாதுகாப்போமாயின், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் அவ்வாறே, பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான தேவை இல்லை. மக்களின் ஆணையை மதிப்பதாயின், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுப்பதற்கான எண்ணம், இந்த அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்களின் சிந்தனையில் துளிர்விட்டிருக்காது” என்றார்.
“இந்த அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டுமாயின் பிழைவிடும் சந்தர்ப்பங்களில் குரல் எழுப்பி, தவற்றை திருத்துவதற்கு வழிசமைக்கவேண்டும். தந்தை, தாய் இருவரும்தான் கூடுதான் திட்டுவார்கள், அதேபோல, இந்த அரசாங்கத்தின் மீது எமக்கிருக்கும் அன்பினால், நாங்கள் அவ்வாறு தூற்றுகின்றோம். சரியான பாதைக்குள் இழுத்துச் செல்வதற்கே முயல்கின்றோம்” என்றார்.
எனவே, மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் போராட்டத்தையே நாம் முன்னெடுத்துள்ளோம் .அரசாங்கத்தின் ஆயுள் குறுகியது. பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது என்பதால் தவறிழைக்கும் இடங்களில் சரி செய்து கொண்டால், செல்ல வேண்டிய தூரத்தை சரியாக மக்கள் ஆசீர்வாதத்துடன் பயணிக்கலாம் என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago