Editorial / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமண கொண்டாட்டத்தில் 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து மணமக்கள் கீழே விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கரில் நடந்த திருமணம் ஒன்றில் இந்த விபரீதம் ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி தங்களுடைய திருமண நிகழ்வின் போது மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் வட்ட வடிவிலான ஊஞ்சல் ஒன்றில் நின்றுகொண்டிருந்தனர்.
ஊஞ்சலை சுற்றி கண்கவரும் வகையில் பட்டாசுகள் வெடிக்க, கீழே நடனக்கலைஞர்கள் நடனமாட, திருமண ஜோடி உற்சாகத்துடன் ஊஞ்சலில் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் முறிந்ததில், திருமண ஜோடி 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் மணமகன், மணமகள் இருவருக்கும் நல்லவேளையாக காயம் எதுவும் ஏற்படவில்லை.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago