Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படையினால் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது.
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தைகளுக்கு உணர்வுரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற போது, வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்களை அதிபர் வெளியேற்றினர்.
இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு
அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையில் நாகர்கோவில் மகா வித்தியாலய அதிபரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனினும், அதிபரின் உறவினரான வல்வெட்டித்துறையை சேர்ந்த யூரியூப்பர் ஒருவர் நினைவேந்தல் நிகழ்வுகளை காணொளி பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025