Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 27 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீகொட பொருளாதார மையத்திற்கு மொத்தமாக பாம் ஒயில் கலந்த தேங்காய் எண்ணெயை தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை விநியோகித்து வந்தது. அந்த ஆலையில் விற்பனை செய்யப்படவிருந்த கிட்டத்தட்ட 2,000 லீற்றர் தேங்காய் எண்ணெயின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குளியாப்பிட்டி, தெல்பதுகம்மன பகுதியில் உள்ள ஆலையில் இருந்த கலப்படமான எண்ணெய் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மீகொட பொருளாதார மையத்தில் அமைந்துள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் பாமாயில் கலந்த தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குருநாகல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் இருந்து பொருளாதார மையத்தின் மொத்த விற்பனை கடைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது என்று அதிகாரி கூறினார்.
இந்த கடையில் இருந்து எண்ணெய் நிரப்பப்பட்ட ஒரே தொட்டியில் இருந்து தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் நுகர்வோருக்கு விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த அதிகாரி கூறினார்.
அந்த கடையில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விற்கப்படும் எண்ணெய் கேன்களில் தொடர்புடைய எண்ணெயின் உற்பத்தித் தகவல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago