Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒழுக்கத்தை மதிக்கும், தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்யக்கூடிய, அனைத்து இன மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கக்கூடிய தலைவர் ஒருவரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிரணியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபைகளை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026