Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் சனிக்கிழமை (26) இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல் மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது.
வருடாந்தம் வழங்கப்படும் மணல் மண், திருவிழா நிறைவடைந்ததும் விற்பனை செய்யப்படுகிறது. அம்பன் கிழக்கில் பத்து லட்சம் கியூப் மணல் மண் அகழப்பட்டு சூழல் சமநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தமது கிராமத்தை தொடர்ந்து அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் கருத்தில் கொண்டும். இம்முறை மணல் மண் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மணல் மண் வழங்க மறுத்திருந்தனர். அதேவேளை தொடர்ச்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் மணல் மண் விநியோகம் இடம் பெற்றது. .
மணல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம் பெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் மண் விநியோகம் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் தனது கிராமத்தில் மணல் மண் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மீறி தனி நபர் ஒருவரது பெயரில் கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் தனி நபர்கள் எவருக்கும் கனிய மணல் அகழ்விற்கு அனுமதி வழங்க கூடாது என ஒருங்கிணைப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில் அதனையும் மீறி தனி நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் அகழ்விற்கு திரு.சகாதேவன் அவர்கள் அனுமதி கோரப்பட்டிருந்தது. தனி நபர் ஒருவருக்கு வழங்க முடியாதென பிரதேச செயலகம் அறிவித்திருந்தது. அதை எதிர்த்து .சகாதேவனால் உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலகத்தால் ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தின் பிரகாரம் தனிநபர் எவருக்கும் மணல் மணல் அகழ அனுமதி வழங்கக்கூடாது என மன்றிற்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் தனி நபர் ஒருவருக்கு கனிய மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago