Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரான பொலிஸ் போதை ஒழிப்பு அலுவலகத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago