Editorial / 2026 ஜனவரி 22 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவின் நகல் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, மேற்படி சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை நான்கு. இந்த மனு அரசியலமைப்பின் 121(1) வது பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சபை நடவடிக்கைகள் தொடங்கும் போது சபாநாயகர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டாக்டர் ஹர்ஷன நாணயக்கார கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களை சமர்ப்பிக்க அன்றிலிருந்து 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் மசோதா மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 512 பபேரின் ஓய்வூதியங்கள் ரத்து செய்யப்படும்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026