2025 ஜூன் 21, சனிக்கிழமை

எம்.பி யின் வழக்கு ஒத்திவைப்பு

Mayu   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொய்யான தகவல்களை அளித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நீதவான் விசாரணை தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுக்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வியாழக்கிழமை (01) ஒப்புக்கொள்ளவில்லை.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​தாம் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என டயானா கமகே நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்படி, குறித்த வழக்கு விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதிக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயினால் ஒத்திவைக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .