2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் தாங்கியில் போதைப் பொருள்: சாரதி கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியல்  சாவகச்சேரி பொலிஸார் நேற்று (08) மதியம் மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஜஸ் போதைப் பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

முத்துராஐவெல பகுதியில் இருந்து யாழிற்கு  எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையாக சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஜஸ், கஞ்சா மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்திய நிலையில், சாரதி ஜஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X