Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூன் 19 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கும் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையிலேயே நேற்று (18) இரவு 8.00 மணியளவில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பொதுமக்களால் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிபிரயேகம் மேற்கொண்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
2 hours ago