2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

எஸ்.ஐ.யின் கணக்கிலிருந்து உருவிய எஸ்.ஐ. கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கிளிநொச்சியில் உள்ள அரவில் நகர் காவல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ), உப-பொலிஸ் பரிசோகரின் சிம் கார்டை திருடி, வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.138,472 எடுத்த குற்றச்சாட்டில் பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புகார்தாரரும் சந்தேக நபருமான பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர்  ஒரே முகாமில் பணிபுரிகின்றனர், மேலும் புகார்தாரரின்   சிம் கார்டை சந்தேக நபரான பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகரே திருடிவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகருக்கு  ஜூலை 31 முதல் அவ்வப்போது பணம் கிடைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரான து உப-பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X