2025 மே 22, வியாழக்கிழமை

ஏப்ரலில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்?

J.A. George   / 2025 மார்ச் 05 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விஜயம் ஏப்ரல் 5 ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு டிசெம்பர் நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 

2024 செப்டம்பரில் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி திஸாநாயக்கவின் முதல் வெளிநாட்டு விஜயமாக இது அமைந்திருந்தது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதியுதவியினை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X