2025 மே 22, வியாழக்கிழமை

22 கஜமுத்துகளுடன் இரண்டு பேர் கைது

Freelancer   / 2025 மே 22 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ஏறாவூரில் பல லட்சம் ரூபா பெறுமதியான - தடைசெய்யப்பட்ட -  22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய  முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகளை நேற்றுப் புதன்கிழமை தாங்கள் கைது செய்துள்ளனர் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலேசாசனைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி.மேனன் தலைமையிலாக குழுவினர் நேற்றுக் காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பிரதேசத்தில் வீதி ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது இந்த நபர் தடைசெய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான 4 கஜமுத்துக்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்டபோது அங்கு மாறு வேடத்;தில் இருந்த பொலிஸார் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்த அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய கட்டட ஒப்பந்தகார் ஒருவரை 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து நேற்று மாலை 5.00 மணிக்குப் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணை பிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X