Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை (31) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 98 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் ஒரு டிங்கி படகுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான 'விஜய' கடற்படை கப்பல் பிரிவினரால் கீரிமுந்தல் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று மறித்து சோதனையிடப்பட்டது. இதன்போது, குறித்த படகில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் 98 கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 41 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் ஏலக்காய் இருப்பு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எம்.எச்.எம். சியாஜ்

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago