2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஐஸுடன் இருவர் கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 13 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

117 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளை லொறியில் கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை குடாவெல்ல மீன்பிடி துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் தங்காலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 
 
கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 
 
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து, மீன்களை ஏற்றிச் செல்லும் குளிர்சாதன வசதிகள் அடங்கிய லொறியில் குறித்த போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X