2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஐ.தே.க. ஆண்டு விழா ஒத்திவைப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .