2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ஐ.நா பிரேரணையில் பாதகமான பரிந்துரைகள் இல்லை’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்  

ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் இலங்கைக்குப் பாதகமான பரிந்துரைகள் இல்லை​யெனத் தெரிவிக்கும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத விஞ்ஞானம் மற்றும் ஆய்வு அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அதனால்தான்,  குறித்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.   

சிறிகொத்தவில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மனித உரிமைகள் பற்றியும், நாட்டு மக்களின் உயிர்வாழும் சுதந்திரம் பற்றியும் மற்றைய தரப்புகள் இலங்கைக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், மேற்படி காரணிகளை அரசாங்கம் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ​தெரிவித்தார்.  

ஆனால், மனித உரிமைகள் மீறப்படும் போது அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமெனத் தெரிவித்த அவர், இலங்கைக்குக் கிடைத்துள்ள ஜனநாயகத்தின் சாம்பியன் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றார்.   

அதேபோல், அரசியல் காரணங்களுக்காக இனவாத்தைத் தூண்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாடுகள் குறித்து ஐ.நாவில் பாராட்டுக் கிடைத்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.   

“ஐ.நா பிரேரணையில், ஒற்றையாட்சிக்குப் பாதகமான பரிந்துரைகள் இருக்குமாயின் அவற்றை நடைமுறைப்ப டுத்தப்போவதில்லை” எனவும் தெரிவித்தார்.   

குறித்த பிரேரணையில் இலங்கையின் சட்டச் செயற்பாடுகளை பலப்படுத்திக்கொள்ளும் வகையிலான பரிந்துரைகள் மாத்திரமே காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இராணுத்தினரைப் பழிவாங்குவதற்கான பரிந்துரைகள் எவையும் அவற்றுக்குள் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .