2021 மே 06, வியாழக்கிழமை

ஐ.ம.ச எம்.பிக்கள் கறுப்பு ஆடையணிதுள்ளனர்

Editorial   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், கறுப்பு ஆடையணிந்து, சபைக்கு வந்துள்ளனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கும், பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள், கறுப்பு ஆடைகளை அணிந்திருக்கவில்லை.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களும், செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .