Editorial / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான ஒக்சிஜன், இருக்கிறது எனத் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உள்நாட்டில் ஒக்சிஜன் தட்டுப்பாடு இல்லையெனவும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கருத்துரைக்கையில்…
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்சிஜன் போதியளவு இருக்கின்றது.
“களுபோவில போதனா வைத்தியசாலையிலும் ஒக்சிஜனுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை” என்றார்.
நாட்டிற்கு மருத்துவ ஒக்சிஜனை விநியோகிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோக சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், ஒக்சிஜன் தொழிற்சாலை நிர்வாகத்துடன் நாளையும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றார். .
இதேவேளை, கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கும் போதனா வைத்தியசாலைகளுக்கும் மேலதிகமான ஜம்போ சிலிண்டர்களை அடுத்த வாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
8 minute ago
22 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
39 minute ago