Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 03 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது
பாலாசோர், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரயில்களில் ஒன்றான இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த ரயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது.
மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு இருந்தது.
அந்த ரயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. ஒடிசா ரயில் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்வு, 900 பேர் படுகாயம் இதனால் எதிர்பாராத விதமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் 10பெட்டிகள் தடம் புரண்டு 3-வது தண்டவாளத்தில் விழுந்தன. அந்த பெட்டிகள் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ஏராளமான பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதில் பலரும் பலத்த காயம் அடைந்து வலியால் துடித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.
இந்த பயங்கரத்தில் மற்றொரு பேரிடியாக, தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் 3-வது த
ண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதின. இதில் அந்த பெட்டிகள் மேலும் சேதம் அடைந்ததுடன், அதில் சிக்கியிருந்த பயணிகளின் நிலையும் மோசமானது.
இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் உடனே அங்கே விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதி முழுவதும் மக்களின் மரண ஓலமும், ரயில் பெட்டிகளின் குவியலுமாக கோரமாக காட்சி அளித்தது.
அதேநேரம் சம்பவ இடம், அதிக மக்கள் வாழிடம் இல்லாத வனம் சார்ந்த ஒதுக்குப்புறமான பகுதி என தெரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் காரிருள் சூழ்ந்திருந்தது. இந்த விபத்தில் சிக்கிய ரயில்களின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன.
அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து உள்ளன. இந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் சுமார் 400 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 350 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின.
விபத்து குறித்து தகவல் அறிந்த தென்கிழக்கு மண்டல ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு உள்ளூர் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளை தொடங்கினர். அத்துடன் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரையும் ஒடிசா அரசு விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 3 குழுவினர், 26 பேர் அடங்கிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jul 2025