2026 மார்ச் 18, புதன்கிழமை

ஒரே இரவில் அழிந்த குடும்பம்; இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

S.Renuka   / 2026 மார்ச் 18 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிம்மதியாகத் தூங்கச் சென்ற ஒரு குடும்பம் ஒன்று அவர்கள் செய்த ஒரு சிறிய தவறே ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள். இதில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நாம் தவறுதலாகச் செய்யும் ஒரு சிறிய விஷயம் கூட எதிர்பார்க்காத மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில் உயிரே போகும் அளவுக்குக் கூட நிலைமை மோசமாகலாம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஆந்திராவில் நடந்துள்ளது. 

அதாவது இரவு முழுவதும் மோட்டர் பைக் என்ஜினை ஆன் செய்து வைத்து விட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 70 வயது நபர், அவரது 8 வயது இரட்டை கொள்ளப் பேத்திகள், அத்துடன் 15 வயது பேரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

அந்த பகுதியில் கடை நடத்தி வரும் நபரின் மோட்டர் சைக்கிளுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது மோட்டர் சைக்கிளை பழுது பார்த்துள்ளார். இருப்பினும், சில சிக்கல் இருந்ததால், இரவு முழுக்க மோட்டர் சைக்கிளை  நிறுத்தாமல் செய்ய வேண்டாம் என்றும் ஒன்னிலேயே வைத்திருக்கும்படியும் மெக்கானிக் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மெக்கானிக் சொன்னதைக் கேட்ட நபர் அப்படியே செய்துள்ளார். மோட்டார் சைக்கிளை இரவு முழுவதும் நிறத்தாமல் எஞ்சினை ஓட செய்தே வைத்துள்ளார். 

இருப்பினும், அவர் மோட்டர் சைக்கிளை வீட்டுக்கு வெளியே வைத்து ஓட செய்யவில்லை. மாறாக வீட்டிற்குள் நிறுத்தி, ஜன்னல்கள் அனைத்தையும் மூடியும் உள்ளார். அதன் பிறகே அவர் மோட்டர் சைக்கிளை இயங்கியுள்ளார். இதுவே 4 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

அதேநேரம், குறித்த நபரும் அவரது மனைவியும் மொட்டை மாடியில் உறங்கச் சென்றதால் உயிர் தப்பியுள்ளனர். ஆனால், அவரது தந்தை, மகன் கார்த்திக், இரட்டைக் குழந்தைகள் ஆகியோர் வீட்டிற்குள் உறங்கியுள்ளனர். கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், பைக்கிலிருந்து வெளியான விஷப்புகை வீடு முழுவதும் நிரம்பியுள்ளது.

சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை நால்வரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார்,  சடலங்கை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மூடிய வீட்டிற்குள் பரவிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.. இச்சம்பவம் பங்கனூர் நகர மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X