Freelancer / 2026 மே 13 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான செலவு 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
டீசல் விலையை 392 ரூபாயாகப் பேணுவதற்காக, அரசாங்கம் தற்போது ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாய் மானியத்தை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மானியக் கொள்கையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இவ்வாறானதொரு முறைமையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வது சாத்தியமற்றது எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
எரிபொருள் பாவனையைக் குறைப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார். R
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago