Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 21 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு யாழ்ப்பாண நோக்கி கார் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய
உயர்ஸ்தானிகராலயத்தில் கலாச்சார உத்தியோதராக கடமை ஆற்றி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவரது மகனும் உயிரிழந்தார்.
இதில் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த துரைச்சாமிக்குருக்கள் சுவாமிநாதஐயர் (வயது 69) என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
மேலும் பெண் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை ஓமந்தை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
18 minute ago