Lenin Raj / 2026 மார்ச் 30 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றக் செயல்களுடன் தொடர்புடையவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய உறுப்பினருமான 38 வயதுடைய ராஜபக்ச பதிரணலாகே பிரபாத் மதுசங்க என அழைக்கப்படும் 'மிதிகம சூட்டி' ஓமானிலிருந்து விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினரால் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையில் கொலை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை வைத்திருத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதிகம சூட்டியை கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் படையினர் சர்வதேச சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
அவர் ஓமானில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள மிதிகம சூட்டியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026