Freelancer / 2024 நவம்பர் 17 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஏழு தசாப்தங்களாக நாவலப்பிட்டி தொகுதியில் அளுத்கமகேவின் தலைமுறையினர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தனர்.
மஹிந்தானந்த அளுத்கமகே, மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கண்டி மாவட்ட மக்களுக்கு தனது சேவை தேவை இல்லை என்பதை பொதுத் தேர்தலில் காட்டியுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அதனால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வருட பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் சிலிண்டர் போட்டியிட்டதாகவும், வாக்காளர்கள் 20,401 வாக்குகளையே தனக்கு வழங்கியதாகவும் இவர் கூறினார்.
கடந்த தேர்தலில் தான் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .