Princiya Dixci / 2022 மே 27 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
“கச்சதீவை வழங்க முடியாது; அதில் உடன்பாடு இல்லை. என்னுடைய நிலைப்பாடு அதுவே” என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மேற்படி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு தமிழர்கள் குறிப்பாக மீனவர்களின் நிலைப்பாடு கச்சதீவை வழங்க முடியாது என்பதுவே. அது எங்களுடைய மீனவர்களுக்கு பாதிப்பாக அமையும்.
“எனவே, கச்சதீவை வழங்கு முடியாது; அதற்கான வாய்ப்பு இல்லை. தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு ஒரு கோரிக்கையை தமிழக முதலமைச்சர் விடுத்திருக்கலாம்.
“ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழக முதலமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழக மற்றும் ஈழத்தமிழ் உறவில் பாதிப்புக்கள் ஏற்படாது.
“ஒரு விடயத்தில் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .