2025 ஜூலை 09, புதன்கிழமை

’கஜா’ சூறாவளி தாக்கும் அபாயம்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவின் மத்தியில் ஏற்பட்டுள்ள வலுவடைந்துள்ள தாழமுக்கம் காரணமாக, காங்கேசன்துறையிலிருந்து 1040 கிலோமீற்றர்  தூரத்தில் காணப்படுவதாகவும், இதன் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் சூறாவளியாக நிலைகொள்ளுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சூறாவளியாக மாறும் சந்தர்ப்பத்தில் இதற்கு “கஜா” என்ற பெயர் இலங்கையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை ஊடறுவி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடற்கரையோர பி​ரதேசங்களில் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்ற வீசக்கூடுமென்றும், இதனால் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .