Freelancer / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும் 37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும் கடன் வழங்க வேண்டாம் என இரண்டு அரச வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீண்டகாலமாக கடனுக்கு எரிபொருள் விற்பனை செய்வதே இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை 8,000 கோடி ரூபாயையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 6,300 கோடி ரூபாவையும் கடனாகப் பெற்றுள்ளதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணத்தை செலுத்தாத காரணத்தினால் கூட்டுத்தாபனம் கடனாளியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அந்த நிறுவனங்களுக்கு கடனுக்கு எரிபொருள் விநியோகிக்கின்றமை நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
37 minute ago
38 minute ago
42 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
42 minute ago
49 minute ago