Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சாஜஹான்
அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, இன்று (29) காலை 10.30மணியளவில், பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவரை வரவேற்றுள்ளார்.
இதனையடுத்து, பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்,
குண்டுத் தாக்குதல் செய்தியை கேட்டு தாம் பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும், சொல்லமுடியாத வேதனைக்கு தாம் ஆளானதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்க கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணப் பொதிகள், பேராயர் பேரருட் திரு. ஜஸ்டின் வெல்பி ஆண்டகையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026